இந்தியாவுக்கு விருது வழங்கி ஐ.நா கவுரவம்

215

உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு முன்னெடுப்பு திட்டத்திற்கு இந்தியாவுக்கு விருது வழங்கி ஐ.நா கவுரவித்துள்ளது. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் இந்திய உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு முன்னெடுப்பு மூலம் மேற்கொள்ளப்படும் திட்டத்திற்காக இந்தியாவுக்கு ஐ.நா விருது கிடைத்துள்ளது.

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அனைவரது உடல் நலத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற பிரதமரின் இயக்கத்திற்கு இந்திய உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு முன்னேடுப்பு வலுவூட்டி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆரோக்கியமான மற்றும் உடல் உறுதி இந்தியாவை கட்டமைப்பதில் நாம் உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.