ரஷ்ய அதிபரை கலாய்த்த உக்ரைன் சிறுமி

469
Advertisement

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை உடனே நிறுத்த வென்றும் என்று உலக நாடுகள் வலியுறுத்தியுள்ள நிலையில் , உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் உதவ முன் வந்துள்ளது. உக்ரைன் மக்களுக்கு ஆதரவு அளிக்கும்விதம் , ரஷ்யா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் போரை ரஷ்யா உடனே நிறுத்த வேண்டும் என பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில் , உக்ரைனை சுற்றிவைத்து தாக்க , ரஷ்யா அதிபர் புதின் உத்தரவிட்டார் . ஏற்கனவே உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது ரஷ்யா படைகள்.

இதையடுத்து சொந்த வீடுகளை இழந்து . பாதுகாப்பான இடங்களுக்கு உக்ரைன் மக்கள் சென்றுவருகின்றனர். சிலர் ” ரஷ்ய வீரர்களை , நேருக்கு நேராக எதிர்த்து நின்று ” சிங்கத்தின் கர்ஜனையை போல் ” தங்கள் நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என தெரிவிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ,ரஷ்யா தாகுத்தலில், ” தீ ” யில் எரியும் தங்கள் வீட்டின் முன் நின்று தாய் மற்றும் சிறுமி ஒருவர் , ரஷ்யாவின் அதிபர் புதினை கிண்டல் செய்யும் விதம் ,

“நன்றி புதின் ! இதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்! இப்போது குளிர்காலத்தில் சூடாக இருக்கும்! என கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.