உக்ரைன் மக்களின் நிலை

379
Advertisement

மனிதன் உலகில் தோன்றிய உயிரினங்களில் ஒன்று.ஆரம்பத்தில் மற்ற உயிரினங்களை வேட்டையாட தொடங்கிய மனிதன் தற்போது தன் இனமான மனித இனத்தையே வேட்டையாடி வருகிறான்.

உணவு , இடம் , உரிமை உள்ளிட்ட பல விவகாரத்தில்   தனக்கென சொந்தம்கொண்டாட தொடங்கியதிலிருந்து வேற்றுமை, பொறாமை , தீண்டாமை என பல புது புது அர்த்தங்களை திணித்தான்.

வரலாற்றாரை புரட்டிப்போட்ட போர் குறித்து பல தலைமுறைகள், எழுதிவைத்துள்ள  குறிப்புகளை புரட்டி தான் தெரிந்துகொண்டனர்.ஆனால், போரால் ஒரு நாட்டின் நிலை என்னாகும் என்று நாம் தற்போது கண்ணால் காண்கிறோம் உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில். 

போரின் தடையங்களை உலகம் அறியச்செய்யும் சில புகைப்படங்களை இங்கே பார்ப்போம்.போரில் பயணிக்கும் உக்ரைன் மக்களின் நிலை இதுதான்.

சொந்த உறவுகளை விட்டு, சொந்த இடங்களை விட்டு ,சொந்த நாட்டை விட்டு,  தாய்நாட்டின் எதிர்காலமாய் இந்த மக்கள்.