வெடிகுண்டை வெறும்கையில் செயலிழக்கச் செய்யும் உக்ரைன் வீரர்கள்

322
Advertisement

கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்ய இராணுவ நடவடிக்கைக்கு மத்தியில் உக்ரைன் மக்களின் தைரியம் , வீரம் , மற்றும் தியாகத்தை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் இணையத்தில் உலா வருகிறது .

உக்ரேனியர்கள் டாங்கிகள் முன் அச்சமின்றி நிற்பதையும், ரஷ்ய வீரர்களை எதிர்கொள்வதையும், தங்கள் நிலத்தை காக்க ஆயுதம் ஏந்துவதையும் இந்த பதிவுகள் காட்டுகிறது.

இந்த வருசையில் , புதிதாக பகிரப்பட்ட ஒரு வீடியோவில் , வெடிகுண்டுகளை அகற்றும் நிபுணர்களின் குழு நம்பமுடியாத துணிச்சலான செயலைச் செய்ததால் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

உக்ரைன் நாட்டின் ஆயுத வல்லுநர்கள் ரஷ்ய வெடிகுண்டை தங்கள் வெறும் கைகளாலும் ஒரு பாட்டில் தண்ணீருடனும் செயலிழக்க செய்வது போல இந்த வீடியோவில் உள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது