சர்க்கஸ் கூண்டிலிருந்து தப்பிய இரண்டு சிங்கங்கள் பயத்தில் ஓட்டம்பிடித்த மக்கள்..!

159
Advertisement

சிங்கம் என்று சொன்னாலே மக்களுக்கும் ஒரு வித பயம் இருக்கும், ஆனால் சிங்கத்தை அருகில் பார்க்கவேண்டும் என்ற அசை அனைவருக்கும் இருக்கும்.

இதனால் தான் மக்கள் உயிரியல் பூங்கா, சர்க்கஸ் போன்ற இடங்களுக்குச் செல்கிறார்கள். ஆனால் தற்போது நாம் பார்க்க இருக்கும் காட்சி மக்களை மிகவும்  அச்சுறுத்தும் வகையில் உள்ளது 

சீனாவின்  ஹெனான்  மாகாணத்தில்  சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்று விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருந்த நிலையில், பயிற்சியாளர்கள் சிங்கங்களை வைத்து சில வித்தைகளை, காண்பிக்கும்  சமயத்தில் எதிர்பாராத  விதமாக   கூண்டில்  இருந்து  தப்பிய சிங்கங்கள்  மக்களுக்கு அருகில் சென்றனர்.  இதனால்  அச்சமடைந்த  மக்கள்  தங்கள்  குழந்தைகளை  கையில்பிடித்தபடி  ஓட்டம்  பிடித்தனர், ஆனால் அதிர்ஷ்ட வசமாகச் சிங்கங்கள் மீண்டும் கூண்டிலேயே அடைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் சிங்கங்கள் யாரையும் தாக்கவில்லை. மேலும் எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் சர்க்கஸ் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.