தென்காசி அருகே, விவசாய நிலங்களில் புகுந்த காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

33
Advertisement

தென்காசி மாவட்டம் சிவகிரி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. 

இந்நிலையில்,  இன்று தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்த விவசாயி வீர்காளை என்பவர்  தனது விவசாய தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் புகுந்த யானை ஒன்று விவசாயியை தாக்கியது.  இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் விவசாயின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வனத்துறையினர். விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

.