குரூப் 2 ஹால் டிக்கெட்டில் தவறுதலான தேர்வு மையத்தின் பெயர் இடம்பெற்றதால் பரபரப்பு
விழுப்புரம் அருகே குரூப் 2 ஹால் டிக்கெட்டில் தவறுதலான தேர்வு மையத்தின் பெயர் இடம்பெற்ற நிலையில், 18 பேரை தேர்வு எழுத அனுமதிக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் குரூப் 2 தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில் அங்கு வந்த 18 பேரின் ஹால் டிக்கெட்டில், தேர்வு மையத்தின் பெயர் திண்டிவனம் என தவறுதலாக குறிப்பிடப்பட்டதால், தேர்வர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் உள்ளே அனுமதிக்க கோரி தேர்வர்கள் காத்திருந்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் வேறு தேர்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு அவர்கள் தேர்வு எழுதினர்.