ஆடுகளை வேட்டையாடும் தெரு நாய்கள்

236

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலம்பாளையத்தை சேர்ந்தவர் குழந்தைவேல்.

ஆடு மேய்க்கும் தொழில் செய்துவரும் இவர் நேற்றிரவு தன்னுடைய ஆடுகளை பட்டிக்குள் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

காலையில் வந்து பார்த்த போது 10 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றது தெரியவந்தது.

கடந்த வாரம் சின்னசாமி என்பவரின் 9 ஆடுகளையும், தங்கமுத்து என்பவரின் 2 மாடுகளையும் தெரு நாய்கள் கடித்து கொன்றது.

கால்நடைகளை தொடர்ந்து வெறி நாய்கள் கொன்று வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.