90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் பேருந்து – படிக்கெட்டில் விளையாடி செல்லும் கல்லூரி மாணவர்கள்

187

திருப்பூர் மாவட்டம் இந்திய தேசிய நெடுஞ்சாலையில், கோவையில் இருந்து பல்லடம் வழியாக செல்லும் தனியார் பேருந்துகள், சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வது வழக்கம்.

இந்நிலையில் கோவையில் இருந்து திருப்பூர் செல்லும் சாந்தாமணி என்ற தனியார் பேருந்தில், இருபுறமும் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு, மாணவர்கள் விளையாடிக் கொண்டு செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகிறது.

தனியார் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் இத்தகைய அலட்சிய போக்கை கண்ட பொதுமக்களும், சமூக ஆர்வளர்களும், பேருந்து ஓட்டனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பேருந்திற்க்கு அபராதம் விதிப்பதோடு, பேருந்தின் லைசன்சை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.