“கொடுத்த புகார் பத்தோடு, பதினொன்றாக சென்றிருக்கும்.. இன்னொரு புகார் எழுதி கொடுங்க”

434

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் அருகில் முருகேசன் என்பவர், பைக் மெக்கானிக் கடை வைத்துள்ளார்.

அவர் கடைக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றார்.

இதுகுறித்து முருகேசன் சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன், பல்லடம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

4 நாட்கள் ஆகியும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்ததை அடுத்து, நடவடிக்கை எடுக்க எஸ்.பி சேஷாங்சாய் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, பல்லடம் காவல் நிலையத்தில் பணிபுரியும் குற்றப்பிரிவு தலைமை காவலர் பழனிசாமி, புகாரளித்த முருகேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

ஏற்கனவே கொடுத்த புகார் பத்தோடு, பதினொன்றாக சென்றிருக்கும் என்றும் காவல் நிலையத்திற்கு வந்து இன்னொரு கம்ப்ளைண்ட் எடுத்துக் கொடுத்துவிட்டு போகுமாறு அந்த தலைமை காவலர் கூறியுள்ளார்.

இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.