Tuesday, December 3, 2024

மாஸ் காட்டும் அஜித்! லேசான சறுக்கல்கள்….சொல்லி அடிக்குமா துணிவு?

ஹெச்.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்திருக்கும் அஜித்துக்கு, முந்தைய இரண்டு படங்களை காட்டிலும் இந்த படம் நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது.

வங்கிகளின் அத்துமீறல்களால் சாமானிய மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையப்புள்ளியாக வைத்து நகர்கிறது துணிவு படத்தின் கதை.

சென்னையின் முக்கிய பகுதியில் உள்ள பிஸியான bankஐ கைப்பற்றும் அஜித் அங்குள்ள மக்களை பணயக்கைதிகளாக பிடித்து வைக்கிறார். அரசும் போலீசும் அலெர்ட் modeக்கு வந்த பின்னர் தான் எதற்காக இந்த கொள்ளை?

அங்கிருக்கும் பணம் யாருடையது போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்க தொடங்குகிறது. ஸ்டைலான தோற்றத்தில் அசத்தும் அஜித், ஜாலியான வில்லனாக score செய்கிறார்.

ரசிக்க வைக்கும் அஜித்தின் நடன அசைவுகளும் ஜிப்ரானின் பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்ப்பவையாக அமைந்துள்ளது. வாடிக்கையான கதாநாயகி போல இல்லாமல் ஸ்டண்ட் காட்சிகளில் கவனம் ஈர்த்துள்ளார் மஞ்சு வாரியர்.

முதல் பாதியில் வேகமாக பயணிக்கும் திரைக்கதை அதன் பின் அப்படியே தேங்கிவிடும் உணர்வை தருகிறது. முதல் பாதியில் character buildupஇல் focus கொடுத்து, இரண்டாம் பாதியில் சொல்ல வேண்டிய சமூகக்கருத்துகள் அனைத்தும் அவசரமாக செயற்கையாக திணிக்கப்பட்டுள்ளது.

‘இது தமிழ்நாடு இங்க உன் வேலைய காட்டாத’ போன்ற பட்டும் படாமல் பேசும் அரசியல் கவனிக்க வைக்கும் அதே நேரத்தில், படத்தில் வரும் பாடல்கள் இடைச்செருகல்கள் போல வந்து செல்கின்றது.

மீண்டும் மங்காத்தா feel கொடுத்து அஜித் ரசிகர்களை துணிவு ஒரு புறம் உயிர்ப்பித்து இருந்தாலுமே உச்சகட்ட ஹீரோயிசம், திகட்ட வைக்கும் action காட்சிகள் பொதுப் பார்வையாளர்களை கவர்ந்து ஹிட்  அடிக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!