40 வருடங்களுக்குப் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

121

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு படித்த பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பள்ளியின் பழைய மாணவர்களை உபசரிக்கும் விதமாக, 90களில் திண்பண்டமாக இருந்த புளிப்பு மிட்டாய், கிரிச்சான் மிட்டாய், சீரக மிட்டாய், எள்ளு உருண்டை உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களையும் வழங்கி உபசரித்தனர். கடந்த காலத்தை நினைவுக்கூறும் வகையில், தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

கடந்த காலத்து வாழ்க்கைக்கே கொண்டு சென்ற இந்த நிகழ்வு பார்ப்போரின்  அனைவரையும் நெகிழ செய்தது.

Advertisement