மெஸ்ஸியின் வெற்றிக்கு பின் இருக்கும்  பெண்! காதலே தனி பெருந்துணை

223
Advertisement

கத்தாரையே குறி வைத்திருந்த கால்பந்து ரசிகர்கள் உலகக்கோப்பை போட்டிகள் முடிவுகள் வந்ததை அடுத்து இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர் என நினைத்தால் அது தான் இல்லை.

பரபரப்பான மற்றும் சுவாரஸ்யமான இறுதிப்போட்டியை ரசிகர்கள் இன்னும் கொண்டாடி தீர்த்தே முடிக்கவில்லை.

பிரான்ஸை வீழ்த்தி அர்ஜெண்டினா மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்ற, லியோனல் மெஸ்ஸி தொடர்நாயகன் ஆனார்.

‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள்’ என்பதன் படி, மெஸ்ஸியின் வாழ்க்கையில் சாத்தியப்பட்ட இப்பெரும் வெற்றிக்கு துணை நின்ற காதலை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஒன்பது வயதில், தனது சொந்த ஊரான ரொசாரியோவில் அண்டோனெல்லா ரோக்கஸோவை முதன் முறையாக சந்தித்தார் மெஸ்ஸி. தனது நண்பரின் உறவினரான அண்டோனெல்லாவை பார்த்த மாத்திரத்தில் பிடித்து போக இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

கால்பந்து துறையில் கவனம் செலுத்த மெஸ்ஸி ஐரோப்பா சென்றதால் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டு அவர்களுக்குள்ளான உறவும் கிட்டத்தட்ட உடைந்து போனது.

2005ஆம் ஆண்டு அண்டோனெல்லாவின் நண்பர் விபத்தில் இறந்துவிட, ஆறுதல் கூற வந்த மெஸ்ஸியுடன் மீண்டும் காதல் மலர்ந்தது. அதன் பிறகு இருவரும் இணைபிரியாமல் இருந்துவந்த நிலையில் 2010ஆம் ஆண்டு ப்ரொப்போஸ் செய்த மெஸ்ஸி 2017ஆம் ஆண்டு அண்டோனெல்லாவை திருமணம் செய்து கொண்டார்.

இறுதிப்போட்டியில் கோப்பையை வென்ற தருணத்திலும் மெஸ்ஸியை அண்டோனெல்லா கட்டி அணைக்கும் நெகிழ்ச்சியான புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேர்காணல் ஒன்றில் அண்டோனெல்லாவை பற்றி பேசிய மெஸ்ஸி, இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முழுவதிலும் என் மனதில் இருப்பது அவள் தான் என பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.