மாம்பழ ஜூசை கலந்து ஆம்லெட் செய்த ரோட்டு கடை உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும்….

149
Advertisement

முட்டையை நாம் பல விதமாக எளிதில் சமைத்துச் சாப்பிடலாம்,

ஆனால் பெரும்பாலான மக்களுக்கு முட்டையை வைத்து தயாரிக்கப்படும் ஆம்லெட் பிடித்த உணவாக இருக்கிறது, இதனைப் புரிந்துக் கொண்ட ரோட்டு கடை உணவு வியாபாரிகள் மக்களைக் கவரும் வகையில் முட்டையை வைத்து புது உணவு முறைகளைத் தயாரித்து வருகிறார்,


எனவே டெல்லியை சேர்ந்த உணவு வியாபாரி ஒருவர், முட்டையில் மாசா ஜூஸ் ஊற்றி பல விதமான உணவுகளைச் சமைக்கிறார், முதலில் இரண்டு முட்டையைப் போட்டு ஹாஃப் பாயில் செய்துக் கொள்கிறார், அதன் பின் எண்ணெய் ஊற்றி அவித்த முட்டையின் இரண்டு மஞ்சள் கருவைப் போட்டு நன்றாக நசுக்கி மசாலா, புதினாவோடு கடைசியில் மாசா ஜூஸ் ஊற்றி மிக்ஸ் செய்து அந்த ஹாஃப் பாயில் மேல் போட்டு கொடுக்கிறார்,

அதற்குப் பின் அதே முட்டையின் வெள்ளைக் கரு பாகத்தை எடுத்துக் கொண்டு பல துண்டுகளாகப் போட்டு மாசா ஜூஸ் ஊற்றி சீஸ் போட்டு கொடுக்கிறார், சம்மந்தேமே இல்லாத இந்த கலவையை ஒருவர் சாப்பிடுவதற்காக எடுத்து செல்கிறார். ஒரே வீடியோவில் பிரபலமாக வேண்டும் என்று இதுபோல செய்யும் நபர்கள் குறித்து உங்களது கருத்துகளை கமெண்டில் சொல்லுங்கள்.