கேரள சட்டசபையின் 15வது சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கி செப்டம்பர் 2 வரை சிறப்பு நடைபெறவுள்ளது

236

கேரள சட்டசபையின் 15வது சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கி செப்டம்பர் 2 வரை சிறப்பு நடைபெறவுள்ளது.

11 அவசர சட்டங்களில் ஆளுநர் கையெழுத்திடாததால் அவை ரத்து செய்யப்பட்ட நிலையில், 10 நாள் சிறப்பு அமர்வு கூட்டப்படுகிறது. ஆளுநர் கையெழுத்திடாததால் காலாவதியான சட்டங்களை புதிதாக நிறைவேற்றுவதற்காக கூட்டத் தொடர் நடைபெறுகிறது. லோக் ஆயுக்தாவின் அதிகாரங்களைக் குறைப்பது, பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமனத்தில்

ஆளுநரின் அதிகாரத்தைக் குறைப்பது போன்ற சட்டத் திருத்தங்கள் சட்டசபைக்கு வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. காலாவதியான அரசாணைகளுக்கு பதிலாக புதிய சட்டத்தை இயற்றுவதற்காக அமர்வு அவசரமாக கூட்டப்படுகிறது என்று சபாநாயகர் எம் பி ராஜேஷ் தெரிவித்திருந்தார்.