இதற்கு இடைக்கால தடை வாங்க கோரிக்கை

360

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெறாத வகையில் இடைக்கால தடை வாங்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி உரிமை மீட்புக் குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம், ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெ.மணியரசன், மேகதாது பகுதியில் அணை கட்டுவது, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் எதிரானதாக இருக்கும் என கூறினார்.