அமெரிக்காவில் அசத்தும் விஜயின் ‘வாரிசு’! ட்ரெண்டிங்கில் முதலிடம்

142
Advertisement

‘ரஞ்சிதமே’ பாடல் தொடங்கி ‘வாரிசு’ படத்தின் அணைத்து பாடல்களுமே ரிலீஸ் ஆனதில் இருந்தே ஹிட் அடித்து ட்ரெண்டிங்கில் முன்னிலை பெற்று வருகிறது. அண்மையில் ஆடியோ லான்ச்சும் நடந்து முடிந்ததால் படத்தின் எல்லா பாடல்களும் வெளியிடப்பட்டு விட்டன.

இந்நிலையில், அமெரிக்க இணையதளமான ‘Billboard’ வெளியிட்ட ட்ரெண்டிங் பாடல் பட்டியலில் ‘Soul Of Varisu’ முதலிடம் பெற்றுள்ளது. சர்வதேச பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள அந்த பட்டியலில் ஒரு தமிழ் பாடல் முதலிடம் பிடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமன் இசையமைத்துள்ள இந்த பாடலை, சின்னக்குயில் என பிரபலமாக அழைக்கப்படும் கே.எஸ்.சித்ரா அவர்கள் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.