கோர விபத்தில் உயிர் தப்பிய விமான பயணிகள்

320
Advertisement

செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில்  பயணிகளுடன் தரையிறங்கிய  தாய் ஏர்வேஸ் விமானத்தின் டயர் வெடித்தது.

தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து புறப்பட்ட பின்னர் பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிர்ச்சியூட்டும் வகையில், பின்பக்க டயர் ஒன்றில் வெடித்தது விமானிக்கு தெரியவில்லை. பெங்களூரு விமான நிலையத்தில் தரைப்படையினர் சேதத்தை கண்டு விமானியை எச்சரித்தனர். சூழ்நிலையை சுதாரித்துக்கொண்ட விமானி விமானத்தை கவனமாக தரையிறக்கினார் 

அதிர்ஷ்டவசமாக தரையிறங்கும் போது அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.விமானம் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு, தொழில்நுட்பக் குழுவினர் சோதனையைத் தொடங்கினர்.

இந்த விபத்து காரணமாக  பெங்களூரில் இருந்து பாங்காக் செல்லும் விமான பயணிகள் பாதிக்கப்பட்டனர் .விமானம் புறப்படும் நேரம் குறித்த எந்த தகவலும் பயணிகளுக்கு விமான நிறுவனம் தரப்பில் தரப்படாததால் பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.