களத்தில் இறங்கிய TESLA

461
Advertisement

டெஸ்லா 19 வருடத்திற்குப் பின் ஐரோப்பியாவில் முதல் தொழிற்சாலையைத் துவங்கியுள்ளது.

சந்தையில் டெஸ்லா கார்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருந்தாலும். பெருமளவில் கார்களை உற்பத்தி செய்ய முடியவில்லை அதேநேரத்தில் குறிப்பிட்ட தேதியில் டெலிவரி செய்ய முடியாத காரணத்தாலும் அதிகப்படியான வர்த்தகத்தைப் பிற நிறுவனங்களுக்கு இழந்து வருகிறது டெஸ்லா நிறுவனம்.

இந்நிலையில் தான் , ஆட்டோமொபைல் துறைக்குப் பெயர்போன ஐரோப்பாவில் தனது முதல் தொழிற்சாலையை ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின்க்கு அருகில் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளது டெஸ்லா.

இதன் மூலம் ஐரோப்பிய சந்தையில் எலர்ட்ரிக் கார்களைத் தயாரிக்கும் அனைத்து முன்னணி கார் நிறுவனங்களுக்கும் போட்டியாக டெஸ்லா உருவெடுத்துள்ளது. ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ள இந்த வேளையில் டெஸ்லா தனது இந்த புதிய தொழிற்ச்சாலையை திறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஐரோப்பிய நாட்டின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளதால் ஐரோப்பிய சந்தையில் டெஸ்லாவுக்கும் போட்டி அதிகரிக்கும். ஏற்கனவே வோக்ஸ்வாகன் நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.