டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகளை போலீசார் கைது செய்த விதம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்….

50
Advertisement

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன, ஆனால் அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விமர்சித்துள்ளார். மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் – தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே போலீசாரின் இந்த செயல் காட்டுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெற்ற திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறியதுதான் அறமா?’ எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.