Tag: banana
அடிக்கடி தசைப்பிடிப்பு வருதா? இதை சாப்பிடுங்க போதும்
இப்பல்லாம் வேலைக்கு போற பெரும்பாலான மக்கள் face பண்ற முக்கிய பிரச்சினை தசைப்பிடிப்பு தான். காரணம், ஓடியாடி வேலை செய்றதை விட computer முன்னாடி உக்காந்து வேலை பாக்குறவங்க தான் அதிகம். ஒரே positionல ரொம்ப நேரம் உக்காந்து இருக்குறது, வேலைப்பளு இப்படி பல காரணங்கள்னால தசைப்பிடிப்பு ஏற்படும்.
அப்ப வீட்ல வேலை செய்றவங்களுக்கு, அல்லது விளையாட்டு வீரர்களுக்கு தசைப்பிடிப்பு ஏற்படாதுன்னுலாம் அர்த்தம் இல்ல. அதாவது தசைகள் ரொம்ப நேரம் செயல்படல அப்படின்னாலும் பாதிக்கப்படும், அதிகமா செயல்பட்டுட்டே இருந்தாலும் பாதிக்கப்படும்.
உடற்பயிற்சி, சரியான வழிமுறைகளை பின்பற்றுவது, இதையெல்லாம் தாண்டி சில உணவுப் பழக்க வழக்கங்களை மாத்துனாலே சிறந்த பலன்கள் கிடைக்கும் அப்படின்னா நம்ப முடியுதா? தசைப்பிடிப்பு பாதிப்புகளை சரி செய்யும் உணவு பழக்கங்களை பத்தி தான் இந்த செய்தி தொகுப்புல தெரிஞ்சுக்க போறோம்.
B Complex vitamin குறைபாடு இருக்கும்போது தசைப்பிடிப்பு அதிகமா ஏற்படும். பால் மற்றும் பால் பொருட்கள், பாலிஷ் செய்யப்படாத அரிசி, சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி ரகங்கள் ஆகிய உணவு வகைகள்ல B Complex அதிகமா இருக்கும். தசைப்பிடிப்புகளை தவிர்க்க உடலின் நீர்ச்சத்தை பராமரிக்குறது ரொம்பவே முக்கியம்.
வியர்வை வழியா உடல்ல இருக்க நீர் வெளியேறும்போது உப்பு சத்துக்களும் வெளியேறிடும். வெயில் காலம் நெருங்கி வர சூழல்ல உப்பு சக்கரை சேர்த்த lemon ஜூஸ், இளநீர் எடுத்துக்குறதும் வாழைப்பழம் சாப்பிடுறதும் இந்த பிரச்சினையை சமாளிக்க ரொம்பவே உதவியா அமையும்.
வாழைப்பழத்துல பொட்டாசியம், மக்னீசியம், Vitamin B6 அதிகம் இருக்குறதால விளையாட்டின் போது ஏற்படுற திடீர் தசைபிடிப்பு சரியாக உதவியா அமையும். அதுனாலயே, தசைப்பிடிப்பு பிரச்சினை இருக்குறவங்க தினசரி ஒரு வாழைப்பழமாவது சாப்பிடுறது பழக்கமாக்கிகுறது நல்லது. இன்னுமே நிறைய பேர் கவனிக்காம இருக்க விஷயம் மக்னீசியம் குறைபாடு.
இந்த மக்னீசியம் குறைபாட்டினால தசைபிடிப்பு ரொம்பவே எளிதா வரலாம். கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, சாமை மாதிரியான சிறுதானியங்கள், பூசணி விதைகள், கொண்டைக்கடலை, பல்வேறு வகையான பருப்பு வகைகள் - இதெல்லாம் அப்பப்ப சாப்பிட்டுட்டு வந்தாலே மக்னீசியம் அளவுகள் சீரா பராமரிக்கப்படும்.
பச்சை காய்கறிகள், இறைச்சி, மீன், முட்டை, பயறுகள் இடம்பெறுற மாதிரியான சரிவிகித உணவு முறையை follow பண்றதோட, சீரான உடற்பயிற்சி மற்றும் முறையான தூக்கம் ஆகிய விஷயங்கள்ல கவனம் செலுத்துனாலே அடிக்கடி ஏற்படும் தசைபிடிப்பு பாதிப்புகள்ல இருந்து விடுபடலாம் என்பதே மருத்துவர்களின் பரிந்துரையா இருக்கு.
அடிக்கடி செவ்வாழை சாப்பிடுறீங்களா? கிட்னியை சட்னி ஆக்கிவிடும் செவ்வாழை? அதிர்ச்சி தகவல்கள்
செவ்வாழை சாப்பிட்டால் உடை எடை அதிகரிக்குமா?
ஒருநாளைக்கு எத்தனை செவ்வாழை சாப்பிடலாம்?
கலோரிகள் அடிப்படையில் மட்டுமே உடல் எடை கூடுமா?
கிட்னி நோயாளிக்கு செவ்வாழை ஆபத்தா?
வாழைப்பழங்கள்ல ரஸ்தாளி, கற்பூரவல்லி, நேந்திரம், பச்சை வாழைப்பழம் மற்றும் செவ்வாழைன்னு எத்தனையோ வகைகள் இருக்கு. இதுல ஒவ்வொரு வகை...
வாழைப்பழம் சீக்கிரமா கெட்டு போகுதா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க
வாழைப்பழத்தை மொத்தமாக பல வீடுகளில் வாங்கி வைப்பதுண்டு. Fridgeஇல் வைத்தால் உடனே எடுத்து
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெய்த கனமழை சூறைக்காற்று காரணமாக வாழைமரம், நெல், மக்காச்சோளம் சேதம் அடைந்தது.
ஆத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
நற்பலன்கள் நிறைந்த வாழைப்பழ டீ
வாழைப்பழம், டீ போன்ற உணவுப் பொருட்கள் நம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளது.
கேரளாவில் மைல்டு போதை தரும் புது சரக்கு …முதல்வர் ஒப்புதல் ..
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புதிய மது கொள்கைக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது .அதன்படி கேரளாவில் அன்னாசி, பலா, வாழை போன்ற பழங்களில் இருந்து குறைந்த...