சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெய்த கனமழை சூறைக்காற்று காரணமாக வாழைமரம், நெல், மக்காச்சோளம் சேதம் அடைந்தது.

281
Advertisement

ஆத்தூர் அதனை சுற்றியுள்ள  பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

இதனால், அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழைமரம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வரும் நேரத்தில் சூறை காற்றில் வாழைமரம் முழுவதும் சரிந்தது. மேலும் 20 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த மக்காசோளம் அரளி பூ உள்ளிட்ட பயிர்களும் சூறைக்காற்றில் அடித்து சென்றது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

எனவே, தமிழக அரசு விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.