ஜெயிலர் பட ஷூட்டிங்கிற்கு கெத்தாக கிளம்பிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..எகிறும் எதிர்பார்ப்புகள்

199
Advertisement

‘பேட்ட’, ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ என வரிசையாக படங்கள் வந்து கொண்டிருந்த நிலையில், கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளிக்கு பின் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.

ஜெயிலர் பட ஷூட்டிங் 60 சதவீதம் அளவிற்கு முடிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஜெயிலர் படத்தின் 5ஆம் கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் Love You தலைவா என ஒலித்த ரசிகர்களின் குரல்களுக்கு, தனது புன்னகையை பதிலாக அளித்தவாறே ரஜினிகாந்த் கிளம்பி சென்றார்.

நெல்சன் கடைசியாக எடுத்த ‘பீஸ்ட்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கும் நிலையில், ஜெயிலர் படம் எப்படி அமைய போகிறது என்ற எதிர்ப்பார்ப்புகள் சினிமா வட்டாரங்களில்  அதிகரித்து வருகின்றன.