தந்தையை மகனே வெட்டி கொலை செய்த சம்பவம்

137

ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் ராமு-ரேணுகா தம்பதி.

இவர்களுக்கு தினேஷ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

மது போதைக்கு அடிமையான தினேஷ் சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

Advertisement

கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த தினேஷ்க்கும், ராமுவுக்குக்கும் நேற்றிரவு சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கரண்ட் இல்லாததால் மாடியில் தூங்கி கொண்டிருந்த

தந்தையை தினேஷ் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராமு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.