திருடன் என்று நினைத்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி !

395
Advertisement

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கோஸ்ட் பகுதியில் ஒரு வீட்டில் இரவு நேரத்தில் சமையலறைக்குள் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டு உள்ளது.

இதனை கவனித்த அந்த வீட்டில் வசிக்கும் பெண் , ஏதோ திருடன் வீடிற்குள் நுழைந்துவிட்டதாக நினைத்து உள்ளூர் காவல்துறைக்கு அழைப்பு விடுத்தார்.

https://www.facebook.com/SunshineCoastSnakeCatchers/videos/1001163794146086

துனிச்சலுடன் சத்தம் கேட்ட அறைக்குள் சென்று பார்த்த பொது அவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி , சமையலறையில் இருக்கும் பொருட்கள் அடுக்கும் இடத்தில் மலைப்பாம்பு ஒன்று சுருண்டு படுத்துருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இந்த தகவலை காவல்துறைக்கு தெரிவிக்க ,

பின்னர் பாம்பு பிடிப்பவர்கள் வரவழைக்கப்பட்டு, மலைப்பாம்பை மீட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த பதிவை சன்ஷைன் கோஸ்ட் பாம்பு பிடிப்பவர்கள் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.