கல்லீரல் கொழுப்பு நோயை காட்டிக்கொடுக்கும் ஆறு அறிகுறிகள்! கவனிக்காவிட்டால் கவலைக்கிடம்…!

156
Advertisement

உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் செயல்பட ஆரோக்கியமான கல்லீரல் அவசியம்.

கல்லீரலில் அளவுக்கதிகமாக கொழுப்பு சேருவதால் சிரோசிஸ் நோய் ஏற்படுகிறது. ஆரம்ப கட்டத்தில் அதிகம் அறிகுறிகளை காட்டாத இந்த நோய், முற்றிய பிறகு மொத்த உடலையும் சாய்த்து விடுகிறது. கொழுப்பு படிந்த கல்லீரல் காட்டும் சில அறிகுறிகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

இரத்தத்தை சுத்தம் செய்வதில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த செயல்பாடு பாதிக்கப்படும் பட்சத்தில் உள்ளங்கைகள் சிவந்து காணப்படும். விரல் நகங்கள் மிகவும் வெளிறிய நிலையில், அதிலும் குறிப்பாக கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் அப்படி இருந்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

கல்லீரல் பாதிப்பினால் ஆக்சிஜன் சப்ளை குறைந்து விரல் நுனிகள் விரிந்து வட்டமாக காணப்படும். சிரோசிஸ் தீவிர கட்டத்தை நெருங்கும் போது உடல் சோர்வு, ரத்தக்கசிவு, பசியின்மை, குமட்டல், கால்கள், பாதங்களில் வீக்கம், உடல் எடை குறைவு, சருமத்தில் அரிப்பு, மஞ்சள்காமாலை, வயிற்றில் நீர் கோர்த்துக் கொள்வது மற்றும் தோலில் சிலந்தி வலை போல இரத்த நாளங்கள் தென்படுவது போன்ற அறிகுறிகள் தோன்றும்.

அதிகமான உடல் எடை, கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய், குறைவான இன்சுலின் உற்பத்தி, உயர் இரத்த அழுத்தம், புகை மது பழக்கம் ஆகியவை கல்லீரலை பாதிக்கின்றன. கல்லீரல் நோய் முற்றிய பின் அதற்கான சிகிச்சை முறைகள் மிகவும் குறைவு என்பதால் முன்கூட்டியே ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை கடைபிடிப்பது அவசியம் என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.