ஒரு பாடலில் மட்டும் நடிக்க 1 கோடி சம்பளம் கேட்ட ஸ்ரேயா….

200
Advertisement

நடிகை  ஸ்ரேயா  சரண்  தமிழ் மற்றும் தெலுங்கில் படங்களில் நடித்து மக்களைக் கவர்ந்தவர் , இவர் திருமணமாகி குழந்தை  பெற்ற  பிறகு  அவர் சீனியர் ஹீரோக்களுக்கு  மனைவியாக  படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

ஆர்ஆர்ஆர்  படத்தில்  அவர்  அஜய்  தேவ்கனுக்கு மனைவியாக  நடித்து இருப்பார், அதனைத்  தொடர்ந்து  சமீபத்தில்  கப்ஜா என்ற கன்னட  படத்தில் அவர்  நடித்து  இருந்தார். அந்த  படம்  பெரிய  அளவில்  ஹிட்  ஆகவில்லை.

40  வயதாகும்  ஸ்ரேயா  இன்றும்  தனது  உடலை  ஃபிட்  ஆக  வைத்து இருக்கிறார், அவர்  இன்ஸ்டாகிராமில்  வெளியிடும்  கிளாமர் போட்டோக்களுக்கு  ரசிகர்கள்  ஏராளம்.

இந்நிலையில்  சிரஞ்சீவியின்  போலா  ஷங்கர்  என்ற  படத்தில்  ஒரு  குத்து பாட்டுக்கு  நடனம்  ஆட  ஸ்ரேயாவை  அணுகி இருக்கின்றனர். அதற்கு  அவர்  1  கோடி  ருபாய்  சம்பளம் கேட்டிருப்பதாகவும்,  அதனால் தயாரிப்பாளர்  ஷாக்  ஆகி  இருப்பதாகவும்  தகவல்  வெளியாகி  இருக்கிறது.