முடிவுக்கு வந்த ‘வாரிசு’ அடுத்து என்ன  ப்ளான்?

113
Advertisement

பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள விஜயின் 66வது படமான வாரிசை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

இதனிடையே, விஜயே பாடி வெளியாகிய ரஞ்சிதமே பாடல் பத்தே நாட்களில் 5 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வேற லெவல் ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் வாரிசு படத்தின் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. இதனுடன் மொத்த படத்தின் படப்பிடிப்பும் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

படக்குழுவினர் post production பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், வரும் வாரங்களில் புது அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமன் இசையில், அனிருத் குரலில் வாரிசு படத்தின் second single அடுத்த வாரம் வெளியாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.