தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி : P F வட்டி குறைப்பு

425
Advertisement

2021-2022 ஆண்டிற்கான பிஎஃப் வட்டி எவ்வளவு என்பது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) தொடர்பான முடிவுகளை எடுக்கும் மத்திய அறங்காவலர் வாரியம் (CBT) தலைமையிலான இன்றைய கூட்டத்தில் பிஎஃப் வட்டி விகிதம் 8.1 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிஎஃப் வட்டி குறைக்கப்பட்டு இருக்கிறது.


இதனால் பிஎஃப் உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் வட்டி விகிதம் மாற்றப்படாமல் இருந்தது.முதலில், 2018-19ஆம் ஆண்டில் பிஎஃப் விகிதம் 8.65 சதவீதமாக இருந்தது. அதன் பின்னர் 2019-20ஆம் ஆண்டில் அது 8.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது பிஎஃப் வட்டி மேலும் குறைக்கப்பட்டு, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.