MAGGI பிரியர்களுக்கு அதிர்ச்சி!

277
Advertisement

நாட்டில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெஸ்ட்லே மேகி டீ, காபி போன்றவைகளின் விலையும் உயர்ந்துவிட்டது.

ஹிந்துஸ்தான் யுனிலீவர் (HUL) மற்றும் நெஸ்ட்லே ஆகிய நிறுவனங்கள் மார்ச் 14 முதல் தேநீர், காபி, பால் மற்றும் நூடுல்ஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்தியுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

12 ரூபாய் மதிப்புள்ள மேகி தற்போது 14 ரூபாய்க்கு கிடைக்கும்.

மேகியின் விலையை 9 முதல் 16 சதவீதம் வரை உயர்ந்துளளது.

நெஸ்லே இந்தியா நிறுவனமும் பால் மற்றும் காபி பவுடர் விலையை உயர்த்தியுள்ளது.

விலை உயர்த்தப்பட்ட பிறகு, தற்போது 70 கிராம் மேகி பேக்கிற்கு ரூ.12க்கு பதிலாக ரூ.14 செலுத்த வேண்டும்.

இதேவேளை, 140 கிராம் மேகி மசாலா நூடுல்ஸின் விலை 3 ரூபாவினால் அதாவது 12.5% அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது 560 கிராம் மேகி பேக்கிற்கு ரூ.96க்கு பதிலாக ரூ.105 செலுத்த வேண்டும்.

அதன்படி, அதன் விலை 9.4% அதிகரித்துள்ளது.

மேலும் ,இது உயர்ந்த விலையின் சுமையை வாடிக்கையாளர்கள் மீது நிறுவனம் சுமத்துவதாக ஹிந்துஸ்தான் யுனிலீவர் தெரிவித்துள்ளது.