மீட்புப்படையில் இணையும்  “எலி படை”

319
Advertisement

நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்களை மீட்க எலிகளுக்கு பயற்சி அளித்து வருகின்றனர் ஆராச்சியாளர்கள்.

மைக்ரோஃபோன்கள் மற்றும் லோக்கேஷன் டிராக்கர்களைக் கொண்ட சிறிய பேக் பேக்குகளை எலிகளுக்கு  அணிவித்து,அதனை நிலநடுக்கத்தில் சேதமடைந்த பகுதிகளுக்கு அனுப்பி அதன்  மூலம் உள்ளே சிக்கியுள்ளவர்களிடம் பேச முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த முயற்சியின் முதல் கட்டமாக  ஏழு எலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.எலிகள் அவற்றின் அளவு மற்றும் சுறுசுறுப்பு காரணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ‘ஹீரோ ராட்ஸ்’ என்ற இந்த  திட்டத்திற்கு  ஸ்காட்லாந்தை சேர்ந்த  ஆராச்சியாளர் டாக்டர் டோனா கீன், தலைமை தாங்குகிறார்.இவர்  ஸ்ட்ராத்க்ளைட் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டம் பெற்றவர்

எலிகள்  சுகாதாரமற்றவை என்பது தவறான எண்ணம் என்றும், இடிபாடுகளில் புதைந்துள்ள பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய எலிகள் உதவும் என நம்புகிறேன்.எலிகளிக்கு பொறுத்தியுள்ள அதிநவீன உபகரணங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் தொடர்புகொள்ளமுடியும் என தெரிவித்துள்ளார்.

இந்த புதிய “ஹீரோ ராட்ஸ்” படை விரைவில்  உலகின் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதிக்கு அனுப்பி இதனை சோதித்து பார்க்கப்படவுள்ளது.