சூரியன் இப்படித்தான் அழியும்! ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

149
Advertisement

உலகின் காலநிலை, பருவ மாற்றங்களை நிர்ணயிப்பது மட்டுமின்றி தாவரங்கள் தொடங்கி விலங்கினங்கள் மற்றும் மனிதர்கள்  வாழ்வதற்கு அடிப்படையாக திகழும் இயற்கை சக்தி சூரியன் ஆகும்.

அப்பேற்ப்பட்ட சூரியனின் உருவாக்கம் மற்றும் அழிவின் சாத்தியக் கூறுகள் எப்போதுமே விஞ்ஞானிகளை வியக்க வைத்து கொண்டே தான் உள்ளது.

பழைய ஆய்வு ஒன்றில் சூரியனின் முடிவுப் பயணத்தை பற்றி ஆய்வில் வெளிவந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 2018ஆம் ஆண்டு Manchester பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், 90 சதவீத நட்சத்திரங்கள் போலவே சூரியனும் சிகப்பு ராட்சசனாக மாறி பின்னர் White Dwarf ஆக மாறி planetary nebula வாக மாறி தன்னுடைய பயணத்தை முடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

ஒரு நட்சத்திரம் செயலிழக்கும் போது அதிகமான வாயு மற்றும் தூசியை விண்வெளியில் வெளியேற்றுவது வழக்கம். இந்த நிகழ்வு envelope என அழைக்கப்படுகிறது. நட்சத்திரம் தொடர்ந்து இயங்க தேவையான எரிபொருள் இல்லாத பட்சத்தில், கடைசியாக இது போன்று வாயுவை வெளியேற்றி தனது ஆயுளை முடித்து கொள்ளும் என ஆல்பர்ட் சிஜில்ஸ்ட்ரா என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

அடுத்த பத்தாயிரம் வருடங்களுக்கு சூரியன் இயங்குவதில் சிக்கல் இருக்காது என்றாலும் கூட, வானியலில் இது ஒரு குறுகிய கால கட்டமாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட அந்த காலகட்டத்துக்கு பின் சூரியன் படிப்படியாக செயலிழந்து பிரபஞ்ச வெளியில் மறைந்து விடும் என ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.