Thursday, July 10, 2025

அழகான,அச்சுறுத்தும் இரத்த ஆறு! வியப்பூட்டும் அறிவியல் பின்னணி

பொதுவாக ஆறு என்றாலே குறிப்பிட்ட நிறத்தில் தான் தண்ணீர் இருக்கும் ஆனால் கற்பனை பண்ணிப்பார்க்கமுடியாத அளவிற்கு அண்டார்டிக்காவில் ரத்த ஆறு ஒன்று ஓடுகிறது. அதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் எண்ணற்ற ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இந்த இரத்த ஆறானது 1911-ஆம் ஆண்டு தாமஸ்  கிரிஃபித் டெய்லர் என்பவரால் கண்டுபிடிக்கபட்டது.இந்த சிகப்பு நிறத்திற்கான காரணம் நீரில் இருக்கூடிய சிகப்பு பாசிகள் என நம்பபட்டது. இந்த ஆறுக்கான முக்கிய காரணமாக குறிப்பிடுவது பனிக்கு அடியில் 2 மில்லியன் ஆண்டுகளாக ஒரு ஓடையாக இருந்துள்ளது.

அப்பொழுது இந்த ஓடையில் மட்டும் கிட்டதட்ட 17 வகையான நுண்ணுயிர்கள் இருந்துள்ளன அவை அனைத்தம் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர்வாழக்கூடியது  என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அப்படி பனிக்கு அடியில் உயிர்வாழ்ந்த நுண்ணுயிர்களில் இருந்து சல்பர் மற்றும் இரும்பு போன்றவை வெளிவந்துள்ளது. இந்த இரும்பு மற்றும் சல்பர் பனிக்கு அடியில் இருந்து மேலே வரும்போது ஆக்ஸிஜனுடன் வேதிவினைக்கு உள்ளாக்கபட்டு சிகப்பு நிறமாக மாறி இரத்த ஆறாக நம் கண்களுக்கு தோற்றமளிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news