தளபதி 67இல் சமந்தா வில்லியா?

164
Advertisement

‘விக்ரம்’ படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு, லோகேஷ் கனகராஜின் மீது மக்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

அடுத்து, விஜய்யை வைத்து இயக்கும் தளபதி 67, எப்படி இருக்கும் என பல யூகங்களும், எப்படி இருக்க வேண்டும் என பல பரிந்துரைகளும் சமூகவலைத்தளங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளன.

தளபதி 67இல் சமந்தா நடிக்க உள்ளதாக ஏற்கனவே பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது சமந்தா இப்படத்தில் வில்லியாக நடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராவிட்டாலும், முன்னணி நடிகர்களுக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை அளிப்பதை லோகேஷ் வாடிக்கையாக கொண்டிருப்பதால், இப்படத்தில் சமந்தா வில்லியாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.