பிங்க் டீ குடிச்சிருக்கீங்களா?

503
Advertisement

பிரம்மிக்க வைக்கும் பிங்க் டீச்சுவை
பலரின் நாள் துவங்குவதே தேநீரில் இருந்துதான்.

நம் வாழ்வோடு ஒன்றிவிட்ட, பிரிக்கமுடியாத பானமாக மாறிவிட்டது தேநீர்.

தண்ணீருக்குப் பிறகு உலகில் அதிக அளவில் பருகப்படும் பானமாக தேநீர் உள்ளது என்றால் மிகையல்ல.

உலகில் எத்தனையோ விதமாகக் கிடைக்கும் தேநீரின் தற்போதைய ட்ரெண்டிங் ‘பிங்க் டீ’.

நூன் சாய் அல்லது காஷ்மீரி சாய் என அழைக்கப்படும் இந்தத் தேநீர் வகை காஷ்மீர் மக்களின் பாரம்பரிய பானங்களுள் ஒன்றாகும்.

GUN POWDER TEA எனப்படும் தேநீர் இலைகளால் உருவாக்கப்படுகிறது .

இந்தத் தேநீர் பிரகாசமான இளஞ்சிவப்பு நிறத்தை அடையும்வரை ஏலக்காய் ,பேக்கிங் சோடா சேர்க்கப்பட்டு, அந்த இலைகளைக் காய்ச்சுவதன் மூலம் பிங்க் நிறத்தை அடைகிறது.

செழுமையான சுவையுடன் கவர்ச்சியான டீயாக உள்ள இந்தத் தேநீரைப் பால் மற்றும் உப்பு சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது.

அவரவர் விருப்பப்படி பாதாம், பிஸ்தா மற்றும் இலவங்கப்பட்டையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

வாமனன் படத்தில் உப்பு போட்டு டீ குடிப்பதைப் பெரும் சோகமானதாகக் காட்டியிருப்பார்கள். ஆனால், வழக்கத்தில் இந்தியாவின் பிரபலமான தேநீர் வகைகளில் உப்பு சேர்த்துக்கொள்வது பாரம்பரியமாக உள்ளது.

குளிர்கால நாளில் அருந்தும்போது மிகவும் சுவையாக இருக்குகிறது இந்த நூன் சாய் என்பது பருகியவர்களின் கருத்து.

பிங்க் டீ, இந்திய தேநீர்களில் மிகவும் பிரபலமான வகைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.