காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

197

சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியில் மே தினத்தன்று ஏற்றப்பட்ட கொடியை அன்றிரவே 11 மணி அளவில் அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்ட நான்கு காவலர்கள் கொடிக்கம்பத்தை உடைத்து எடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் விளக்கம் கேட்டபோது எந்த ஒரு பதிலும் அளிக்காமல் இழுத்தடித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த தொழிற்சங்க நிர்வாகிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கொடி கம்பத்தை உடைத்து எடுத்து சென்ற ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement