ரஷ்யா-உக்ரைன் போரால் சமையல் எண்ணெயின் விலை அதிகரிக்கும் அபாயம் !

252
Advertisement

ரஷ்யா-உக்ரைன் போர் அபாயத்தால் சமையல் எண்ணெயின் விலை உயரும் வாய்ப்பு உள்ளது என்றும்,

இந்த விலையேற்றத்துக்கு வணிகர் சங்கம் பொறுப்பாகாது என்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவரான விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

சேலம் மண்டல நாமக்கல் மாவட்ட செயலாளர் விஜயகுமார், வெள்ளையன் தலைமையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சேலம் மண்டல பொதுக்குழு கூட்டம் ஒன்று தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இதனையடுத்து விக்ரமராஜா கூறுகையில் ,
“தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மே 5 ஆம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்தப்பட உள்ளன.

அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

ரஷ்யா – உக்ரேன் மீது போர் தொடுக்க ஆரம்பித்தவுடன் எண்ணெய் விலை 60 ரூபாய் உயர்ந்துள்ளது.

பாமாயில் விலை உச்சத்தை தொட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக டீசல், பெட்ரோல் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போர் நின்ற பிறகும் பிரச்சினை தீருமா என யாருக்கும் தெரியாது. இந்த விலை ஏற்றத்திற்கு வணிகர் சங்கத்திற்க்கு எவ்விதமான தொடர்புமில்லை.

வணிகர் சங்கம் இதற்கு பொறுப்பேற்காது.

விலை ஏற்றத்துக்கு நாங்கள் பொறுப்பு அல்ல.

பதுக்கல் என்ற வாசகம் எங்களிடம் இல்லை.

அது கார்ப்பரேட் கம்பெனிகளிடம் மட்டுமே உள்ளது.

அரசுத்துறை அதிகாரிகள் அதனை கண்காணிக்க வேண்டும்,” என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.