உக்ரைனை இருட்டாக்கிய ரஷ்யா! சிக்கி தவிக்கும் 9 மில்லியன் மக்கள்

239
Advertisement

நீண்டு கொண்டே போகும் ரஷ்யா உக்ரைன் போரினால் பாதிப்புகளும் சேதங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய உலக நாடுகள் வன்மையாக கண்டித்து வருவதோடு, உக்ரைனுக்கு தேவையான நிதி மற்றும் ராணுவ உதவிகளை செய்து வருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும் ரஷ்யா அவ்வப்போது தாக்குதல்களில் ஈடுபட்டு வந்ததால், மின் இணைப்பு சேவைகள் வெகுவாக பழுதுபட்டுள்ளன.

அன்றாடம், இரவு நேரத்தில் போர் பற்றிய  நிலவரங்களை நாட்டு மக்களிடையே வீடியோ மூலம் பகிர்ந்து கொள்ளும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இது குறித்து பேசியுள்ளார்.

அப்போது அவர் கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் மக்கள் மின்சேவை கிடைக்காமல் இருளில் சிக்கி அவதிப்பட்டு வருவதாக கூறினார். மேலும், மின் இணைப்பு பழுதுகள் வேகமாக சரிசெய்யப்பட்டு வருவதாகவும், மின்வெட்டுகள் படிப்படியாக குறைந்து, நாளடைவில் இந்த நிலைமை சீராகும் என்றும் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.