உலகப்போரில் உதவிய Rolex

361
Advertisement

பல்வேறு காரணங்களுக்காக Rolex  ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியில் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்தை சேர்ந்த ஜெரால்டு என்பவர் அணிந்திருந்த ரோலெக்ஸ் வாட்ச் 189,000 டாலர்களுக்கு அண்மையில் ஏலம் விடப்பட்டுள்ளது.

1944ஆம் ஆண்டு, மார்ச் 24 அன்று, ஹிட்லரின் சிறைகளில் இருந்து கைதிகள் தப்பித்த நிகழ்வின் போது, ஜெரால்டு அணிந்திருந்த ரோலெக்ஸ் வாட்ச் சுரங்கப்பாதை வழியாக தப்பிக்க தேவைப்படும் நேரம் போன்றவற்றை கணக்கிட உதவியதாக ஏலத்தை நடத்திய கிறிஸ்டி  நிறுவனம் தெரிவித்துள்ளது.

200 கைதிகளில் 76 பேர் மட்டுமே தப்பினர். அன்றைய தினம் ஜெரால்டால் தப்பிக்க முடியவில்லை என்றாலும் அன்று கொல்லப்பட்ட 50 பேரிலும் அவர் இல்லை.

1945ஆம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்த ஜெரால்டு 2003ஆம் ஆண்டு தனது 85ஆவது வயதில் இறக்கும் வரையில் தற்போது ஏலம் விடப்பட்டுள்ள ரோலெக்ஸ் வாட்சை அணிந்து வந்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட, திடுக்கிட வைக்கும் வரலாற்று சம்பவத்தை தழுவி The Great Escape என்று 1963இல் திரைப்படம் ஒன்று வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.