ரட்சிதாவுக்கும் எனக்கும்…… உண்மையை உடைத்த ராபர்ட் மாஸ்டர்!

293
Advertisement

பொழுதைக்கும் புது புது பஞ்சாயத்துகளோடு பிக் பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க, வாரா வாரம் ஒருவர் வெளியேறி வீட்டில் போட்டியாளர்களின் எண்ணிக்கை மெதுவாக குறைந்து வருகிறது.

அதே போல, கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

வீட்டிற்குள் இருக்கும் போது ரட்சிதாவுடன் நெருக்கம் காட்டி வந்த ராபர்ட் மாஸ்டரின் செயல்பாடுகள் பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பல சர்ச்சைகளை கிளப்பியது.

இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் ரட்சிதா குறித்து மனம் திறந்துள்ளார்.

ரட்சிதாவுக்கும் தனக்கும் இருப்பது நட்பு மட்டுமே எனவும் வெளியில் இருந்து பார்க்க அது வேறு மாதிரி தெரிந்து இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ரட்சிதா மிகவும் தனிமையில் இருந்ததாகவும் அப்போது பேசி இருவரும் நட்பை வளர்த்து கொண்டதாக ராபர்ட் மாஸ்டர் பகிர்ந்துள்ளார்.