ரெட்டை கதிரே…மத்தியப் பிரதேசத்தில் பிறந்த ஆச்சரிய குழந்தை..!

341
Advertisement

உலகில் பிரசவத்தின்போது குழந்தைகள் ஒட்டிப்பிறப்பது. இரட்டைக் குழந்தைகளும் தலைகள் ஒன்றுடன் ஒன்றாக பிறப்பது போன்ற வினோதங்கள் அவ்வப்போது நிகழ்வது வழக்கம். இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் பிறந்த குழந்தை ஒன்று பெரும்  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிறந்த குழந்தை இரண்டு தலைகள், மூன்று கைகள் மட்டும், இரண்டு கால்களுடன் பிறந்துள்ளது.

இதனால், குழந்தைக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் உள்பட மருத்துவ குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.மிகவும் அரிதாக பிறந்துள்ள இந்த குழந்தை ஐ.சி.யூ. வார்டில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு அடுத்து மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து மருத்துவ குழுவினர் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, அந்த குழந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.தங்களுக்கு பிறந்த முதல் குழந்தையை இரண்டு தலைகள் மற்றும் மூன்று கைகளுடன் பிறந்தது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.