பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இக்கிராமத்தில் ஆயிரத்து ஐநூறு ரேஷன் கார்டு அட்டைதாரர்கள் உள்ளன.
இதனால், அனைத்து பொருட்களையும் வாங்குவதில் மிகவும் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
எனவே, ஊரிலுள்ள ரேஷன் கடையை இரண்டாகப் பிரித்து கிழக்கு பகுதிக்கு ஒரு கடையும், மேற்கு பகுதிக்கு ஒரு கடையும் அமைத்து தரக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.