தந்தை இறந்த நிலையிலும் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி

68

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது கடைசி மகள் முத்துமாரி.

கமுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த முத்துமாரிவுக்கு நேற்று கடைசி பொதுத்தேர்வு நடந்தது.

இதனிடையே  அவரது தந்தை முத்துபாண்டி உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். முத்துப்பாண்டியின் உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையிலும், முத்துமாரி தனது கடைசி தேவான வரலாறு பாட பொதுத்தேர்வு எழுத சென்றார்.

Advertisement

தேர்வு எழுதும் மையத்திற்கு ஆய்வு பணிக்காக வந்த கல்வித்துறை துணை இயக்குநர் வெற்றிசெல்வி, தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய மாணவிக்கு ஆறுதல் கூறினார்.