வெளுத்து வாங்கிய மழை

225

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் நேற்று பரவலாக கனமழை பெய்தது.

சேத்துப்பட்டு, சூளைமேடு, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இதேபோன்று போரூர், கிண்டி, கோயம்பேடு, எழும்பூர், பாரிமுனை, ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், பல்லாவரம், பம்மல், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது.

சென்னையில் தொடர்ந்து மூன்று நாட்களாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.