அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிரான, ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு குஜராத் உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது..!

25
Advertisement

மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இதனால், ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. ராகுல் காந்தி, தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது. இதைதொடர்ந்து அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்த, குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு கடந்த 29ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு விசாரணை மே 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிரான, ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.