தமிழகத்தில் நடந்து முடிந்த 10,11, மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 6 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என்று செய்தி வெளியான நிலையில், அரசு தேர்வுத்துறை அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆண்டு தோறும் ஒரு லட்சம் மாணவர்கள் பங்கேற்காமல் இருப்பது வழக்கமான ஒன்றுதான் என்றும் தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
26.76 லட்சம் மாணவர்கள் எழுத வேண்டிய பொதுத்தேர்வை, 1.2 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.
இதனிடையே ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ‘உடனடித் தேர்வில்’ கலந்து கொள்ளச் செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.
இதற்கான ‘செயல்திட்டத்தை’ தயார் செய்திடும்படி அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.