கர்ப்பமாக இருக்கும் இலியானா பகிர்ந்த காதலரின் புகைப்படம்! வைரல் ஆகும் க்ளிக்

227
Advertisement

விஜயுடன் ‘நண்பன்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இலியானா D Cruz, பாலிவுட் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

ஏப்ரல் மாதத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் இலியானா.

முதலில் பட ப்ரோமோஷனுக்காக இருக்கும் என அனைவரும் நினைத்த நிலையில், உண்மையிலேயே அவர் கர்ப்பமாக இருப்பது உறுதியானது. கர்ப்பகாலம் சந்தோஷமாக இருந்தாலும், சில நேரங்களில் குழப்பமாகவும் குற்ற உணர்வோடும் இருப்பதாக தெரிவித்துள்ள இலியானா, இவை அனைத்திற்கும் நடுவே தான் வலிமையான தாயாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் மிகவும் சோகமாக உணரும் போதும் தன்னிடமே அன்பாக நடந்து கொள்ள மறக்கும் போதும் இந்த ஒரு நபரின் அரவணைப்பு தான் தன்னை காப்பற்றி வருவதாக உருக்கமான நீண்டதொரு பதிவிட்டுள்ளார் இலியானா. Black and Whiteஇல் இருவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள இலியானா தனது காதலரின் பெயரை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.