திருச்சியில் நகை பட்டறையிலிருந்து  ஒரு கிலோ தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் போலீசார் தேடி வருகின்றனர்…

70
Advertisement

திருச்சி மாவட்டம்  மலைக்கோட்டை அருகே உள்ள சௌந்தர பாண்டியன் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவர் நகை பட்டறை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிக்கு சென்றுள்ளார்.  இதனையடுத்து ஜோசப் இன்று காலை கடையில் வந்த போது கடையிலிருந்த  950 கிராம் தங்கம், கால் கிலோ வெள்ளி, மற்றும்  1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுக்குறித்து ஜோசப் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.