Work From Home மூலமாக 6 நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்!

239
Advertisement

கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக உலகெங்கிலும் உள்ள மக்களின் பணிச்சூழல் மாறியுள்ளது.

வெளியுலகம் பாதுகாப்பற்றது என்று கருதப்படும் நிலையில், பெரும்பாலான பணியாளர்கள் Work From Home திட்டத்தின் மூலமாக வீட்டில் இருந்தபடியே பணி செய்து வருகின்றனர்.

ஆனால், அலுவலகத்தில் பணிபுரிவது போன்ற சௌகரியம் வீட்டில் இல்லை என்ற புகார் கடந்த 2 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, வீட்டில் இருந்து பணிபுரிவதால் நீண்ட நேரம் பணி செய்யுமாறு வலியுறுத்தப்படுகிறோம் வொர்க் பிரஷர் அதிகமாக இருக்கிறது என்றும் பணியாளர்கள் பலர் கூறி வருகின்றனர்.

என்னதான் வீட்டில் இருந்தே பணி செய்வது என்றாலும், ஒரு சமயத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதே நமக்கு கடினமாக உள்ள போதிலும், ஒரே சமயத்தில் 6 இடங்களில் பணிபுரியும் நபர் குறித்த தகவல் நம்மையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

வொர்க் பிரம் ஹோம் வசதியின் மூலமாக ஆறு நிறுவனங்களில் பணியாற்றி வருவதாக கூறும் அவர் ‘ரெட்டிட்’ என்ற இணையதளத்தில் தனது பணி வாய்ப்புகள் குறித்த தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.

தான் ஐடி தொழில் துறையில் பணியாற்றி வந்த நிலையில், கொரோனா சூழல் காரணமாக தற்போது மேலும் பல வேலைகளை செய்யும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் அவர் பார்க்கும் வேலை எதுவும் பார்ட் டைம் ஜாப் அல்ல ஆறு இடங்களிலும் முழுநேரமாக பணி செய்து வருகிறார்..

இது குறித்து ஒரே சமயத்தில் ஆறு நிறுவனங்களில் வேலை பார்க்கும் அளவுக்கு திறனும், கடுமையான உழைப்பும் இருப்பது குறித்து பலர் பாராட்டுகின்ற போதிலும், அவரது நேர்மை குறித்து நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

ஒரே சமயத்தில் ஆறு நிறுவனங்களில் பணியாற்றுவது சட்ட ரீதியாக நியாயமானதா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

அதேசமயம், ”எனக்கெல்லாம் ஒரு வேலைவாய்ப்பு கிடைப்பதே மிகுந்த சிரமமாக இருக்கிறது, உங்களுக்கு 6 வேலைவாய்ப்புகளா? அப்படியானால் எனக்கும் கொஞ்சம் டிப்ஸ் கொடுங்கள்’’ என்று சுட்டி நெட்டிசன் சிலர் கூறுகின்றனர்..