விமானத்தின் இருக்கைகள் மற்றும்  ஜன்னலை உதைத்து ரகளை-  கதிகலங்கிய பயணிகள்

328
Advertisement

கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி ,பெஷாவரிலிருந்து -துபாய் சென்று  பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் நடுவானில் பறந்துகொண்டு இருந்த பொது,மற்ற பயணிகளை அச்சுறுத்தும் விதம்  இருக்கைகளை பலமுறை உதைத்து ரகளை செய்ததாக  கூறப்படுகிறது.

பின்னர் நிலைமையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் விமானப் பணிப்பெண்கள் தலையிட்டபோது அவர்களையும் தாக்கியதாக சொல்லப்படுகிறது. சற்று நேரம் கழித்து முகத்தில் துணியை கட்டிக்கொண்டு விமானத்தில் நடுவில் உள்ள நடைபாதையில் படுத்துக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, துபாய் நிலையத்தில் அந்த நபரை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது காவல்துறை மேலும் விமான நிறுவனத்தால் தடுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அந்த நபர்  விமானத்தில் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும்,விமானத்தின் ஜன்னலை காலால் உதைத்து சேதப்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.